
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பெயரில் வீடுகள், ஏரிகள் மற்றும் விவசாய நிலங்களை அழிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து, பாதிக்கப்பட உள்ள கிராம மக்கள் தொடர்ச்சியாக அறவழியில் போராடி வருகிறார்கள்.
இந்த திட்டம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் மிகவும் மோசமாக பாதிக்கும் என்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.
பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் நியாயமான எதிர்ப்புக்கு முழுமையான ஆதரவு தெரிவித்தோம். தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் மக்களுக்காக, மக்களுடன் உறுதியாக நிற்கும்.