
கழகம் பற்றி
மக்களின் நம்பிக்கையால் உருவான இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். தலைவர் விஜய் அவர்களின் தலைமையில், சமத்துவம், சமூக நீதி, மக்கள் முன்னேற்றம் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கம் இது. மக்கள் நலன் சார்ந்து நமது வெற்றித் தலைவரின் நீண்டகால சிந்தனையின் வெளிப்பாடாக உருவான அரசியல் இயக்கம். இது, தமிழ்நாட்டின் அனைத்து மக்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட முதன்மை சக்தியாக இயங்கி வருகிறது.

பெயர் விளக்கம்
கட்சிக்கான பெயர் விளக்கம்
அரசியலில் மட்டுமன்று. பொதுவாகவே நமக்கு ஒரு பெரிய அடையாளம் வேண்டுமெனில், நமது பெயரே ஓர் அடையாளமாக மாற வேண்டும்.
ஒவ்வொரு பெயருக்கென ஒரு தனிப்பட்ட ஆற்றலும் சக்தியும் உண்டு. அத்தகைய ஆற்றலையும் சக்தியையும் கொடுப்பதே அப்பெயரில் இருக்கும் சொற்களின் வலிமைதான்.