

தலைமைத்துவம்

தலைவர் விஜய்
ஒரு திரைப்பட கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர், சமூக பொறுப்புமிக்க மனிதராக அனைத்து சமூக செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது ரசிகர்களை பொறுப்புமிக்க மனிதர்களாக மேம்படுத்தும் பெரும் கடமையை ஏற்று நடத்தினார். ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றினார். சமூகப் பொறுப்பு, தன்னலமற்ற பொதுச் சேவைகளை மட்டுமே கடமையாகக் கொண்டு செயற்பட்ட தளபதியின் நற்பணி மன்றத் தோழர்களை, இயக்கமாக ஒருங்கிணைப்பதன் காலத்தின் தேவையின் பொருட்டு 'விஜய் மக்கள் இயக்கம்' தொடங்கப்பட்டது. ஈழத்தமிழ் உறவுகளுக்காக உண்ணாவிரதப் போராட்டம், தமிழக மீனவர்களுக்காகக் குரல், ஜல்லிக்கட்டு தமிழர் உரிமைக்காகத் துணை நின்றது போன்ற சமூக களத்திலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கான தேவைகள் எனத் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட நற்பணிகளையும் மக்கள் இயக்கமாக வழிநடத்தினார். கழகத் தலைவரின் நேரடி அரசியல் ஈடுபாடு என்பது அவரது கடமையான பொறுப்புகளையும், காலத்தின் மற்ற தேவையையும் நிறைவு செய்வதாக நிகழ்ந்துள்ளது. மக்களின் தேவையையும் நம்பிக்கையும் மட்டுமே ஏற்று உருவான தலைமை, தமிழகத்தின் வருங்கால மக்களாட்சிக்கான பொறுப்பைச் சாத்தியப்படுத்தும்.

வீரர்கள்
என். ஆனந்த்
பொதுச் செயலாளர்
சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவராகவும், கழகத் தோழர்களை ஒருங்கிணைக்கும் கட்டமைப்புத் தூணாகவும் செயற்படுகிறார் பொதுச் செயலாளர் திரு. என். ஆனந்த். கழகத் தலைவரின் ஆற்றல்மிக்க ரசிகராக பொது வாழ்வைத் தொடங்கினார். புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற தலைவர் முதல் அகில இந்திய விஜய் நற்பணி மன்ற பொறுப்பாளர் வரை முதன்மை பொறுப்புகளை வகித்தார். 2006-ம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
