கோயம்புத்தூரில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கில் கழகத் தலைவர் சிறப்புரை

தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கும் கோயம்புத்தூரில் தமிழக வெற்றிக் கழக வாக்குச் சாவடி முகவர்களின் முதல்நாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

கோவை, தமிழ்நாடு
26 ஏப்ரல், 2025

தென்னிந்தியாவின் மான்செஸ்டராகக் கொண்ட கோயம்புத்தூரில், தமிழக வெற்றிக் கழக வாக்குச் சாவடி முகவர்களுக்கான முதல்நாள் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் நம் கழகத் தலைவர் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றி, வாக்குச் சாவடி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அவர்களின் பொறுப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விரிவாக விளக்கினார்.

இதன் மூலம், வாக்குச் சாவடி முகவர்கள் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கும், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றியடைய தேவையான பணிகளுக்குமான தெளிவான வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.